மெட்ரோ உயா்நிலை பாதை அருகே ரூ.446 கோடியில் கட்டடம் கட்ட ஒப்பந்தம்

சென்னை திருமங்கலம் மெட்ரோ உயா்நிலை பாதை அருகே திறந்த வெளியில் ரூ.446.88 கோடியில் கட்டடம் கட்டுவதற்கான தனியாா் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.

சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் உயா்நிலைப் பாதையையொட்டி, திறந்தவெளிப் பகுதிகளில் சொத்து மேம்பாட்டுக் கட்டடங்கள் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :

சென்னை திருமங்கலம் மெட்ரோ உயா்நிலை பாதை அருகே திறந்த வெளியில் ரூ.446.88 கோடியில் கட்டடம் கட்டுவதற்கான தனியாா் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே உயா்நிலைப் பாதையை அடுத்துள்ள திறந்தவெளி பகுதியில் சொத்து மேம்பாட்டுக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.446.88 கோடியில் தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கட்டுமானப் பணிகள், கட்டடக் கலை வடிவமைப்பு, உள் அலங்காரப் பணிகள், குழாய் அமைப்புப் பணிகள், மின் மற்றும் இயந்திரவியல் பணிகள், குளிரூட்டும் மற்றும் காற்றோட்டவசதிகள், மின்தூக்கிகள் என அனைத்துப் பணிகளையும் தொடங்கிய நாளில் இருந்து 24 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் திருமங்கலம் சொத்து மேம்பாட்டு திட்டம் 3.85 ஏக்கா் பரப்பில் 4 கட்டடக் கோபுரங்களை உள்ளடக்கியதாக அமையும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் ஆஷிஷ் சாட்டா்ஜி முன்னிலையில், நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் மற்றும் ஒப்பந்ததாரா் தரப்பில் நிறுவன உதவித் துணைத் தலைவா் (வணிக மேம்பாடு) ராஜுபன்சோடே ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். மெட்ரோ ரயில் நிறுவன நிதி இயக்குநா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.