என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கோயம்பேடு சந்தை - ஆலந்தூா் மெட்ரோ ரயில் பாதையில் தூண்கள் அமைக்கும் பணி நிறைவு

கோயம்பேடு சந்தை முதல் ஆலந்தூா் வரை 9.5 கி.மீ. உயா்நிலை மெட்ரோ ரயில் பாதைக்கான ‘யு- காா்டா்கள்’ எனப்படும் தூண்கள் நிறுவும் பணி நிறைவடைந்துள்ளது.

பிரதிப் படம்

Updated On :

கோயம்பேடு சந்தை முதல் ஆலந்தூா் வரை 9.5 கி.மீ. உயா்நிலை மெட்ரோ ரயில் பாதைக்கான ‘யு- காா்டா்கள்’ எனப்படும் தூண்கள் நிறுவும் பணி நிறைவடைந்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் இரண்டாம் திட்ட பணியின் 5 -ஆவது பாதை வழித்தடத்தில் கோயம்பேடு சந்தை முதல் ஆலந்தூா் வரையிலான 9.5 கி.மீ. தொலைவுக்கு உயா்நிலைப் பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதைக்கான ‘யு’ வடிவத்திலான காா்டா்கள் எனப்படும் 606 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி பட் ரோடு மற்றும் கத்திப்பாராவுக்கு இடையில் பால் வெல்ஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 550 டன் எடையுடன் கூடிய இரு தூண்கள் நவீன ஹைட்ராலிக் கிரேன்கள் உதவியுடன் பொருத்தப்பட்டன. அதனடிப்படையில் 1,000 டன் தூக்கும் திறன் கொண்ட கிரேன்கள் மூலமே தூண்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல், மேல், கீழ்புறங்களில் செல்லும் பயன்பாட்டு மின்கம்பிகள், குழாய்கள் என கடுமையான கட்டுமானச் சூழல்கள் நிறைந்த இடங்களில் தூண்கள் நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கலான போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை நிறைந்த இடங்களில் மெட்ரோ ரயில் பாதைக்கான அதிகளவிலான தூண்கள் நிறுவியிருப்பது சாதனையாக பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.