ஒரே நாளில் 1,376 பேருந்து நிறுத்தங்களில் 35 டன் குப்பைகள், கழிவுகள் அகற்றம்!
ஒரே நாளில் சென்னை மாநகராட்சியில் உள்ள 1,376 பேருந்து நிறுத்தங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 35 டன் குப்பைகள், கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

தூய்மைப் பணி மேற்கொண்ட ஊழியா்கள்.
ஒரே நாளில் சென்னை மாநகராட்சியில் உள்ள 1,376 பேருந்து நிறுத்தங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 35 டன் குப்பைகள், கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருப்பதாவது: மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 1,376 பேருந்து நிறுத்தங்களிலும் குப்பைகளை அகற்றுதல், நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தால் அதை அகற்றி சுத்தமாக்குதல், கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தால் அவற்றை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளை அந்தந்த பகுதி தூய்மைப் பணியாளா்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தனா்.
சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை வரை பேருந்துகள் நிறுத்தம் தூய்மைப் பணி நடைபெற்றது. அமைந்தகரை பிரதான பூந்தமல்லி சாலை பழைய லட்சுமி பேருந்து நிறுத்தம், செனாய் நகா் மெட்ரோ அருகேயுள்ள பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவற்றில் தூய்மைப் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதேபோல நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்த பேருந்து நிறுத்தங்களிலும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி 18 டன் குப்பைகளும், 17 டன் கட்டடக் கழிவுகளும் என மொத்தம் 35 டன் குப்பைகள், கழிவுகள் பேருந்து நிறுத்தங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. பணியின் போது சேதமடைந்த பேருந்து நிறுத்தங்கள் கணக்கிடப்பட்டு சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகக் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

