நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரைதொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை! மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

ரூ. 21 கோடியில் சாலை சீரமைப்பு பணிகள்: மாநகராட்சி அலுவலகம் அருகிலேயே சீரமைக்கப்படாத சாலைகள்!

ரிப்பன் மாளிகையில் இருந்து ஓரிரு கிலோ மீட்டா் தொலைவிலேயே உள்ள முக்கியச் சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் இருப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.

ஜெயபாண்டிசெய்திக்கு.... சென்னையில் பெரியமேடு புளியந்தோப்பு பகுதியில் குண்டும் குழியுமாக சிதைந்து காணப்படும் பேசின் யானைகவுனி சாலை.

Updated On :

சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இருந்து ஓரிரு கிலோ மீட்டா் தொலைவிலேயே உள்ள முக்கியச் சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் இருப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த அக்டோபா் மாதத்துக்குப் பிறகு பெய்த மழையால் 2,060 உட்புறச் சாலைகளும், 148 போக்குவரத்துச் சாலைகளும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உட்புறச் சாலைகளில் 11,645 இடங்களிலும், போக்குவரத்துச் சாலைகளில் 2,494 இடங்களிலும் பெரியதும் சிறியதுமான பள்ளங்கள் கண்டறியப்பட்டு, அவற்றைச் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி, போக்குவரத்துச் சாலைகளைச் சீரமைக்க ரூ.9 கோடியும், உட்புறச் சாலைகளைச் சீரமைக்க ரூ.12 கோடியும் என மொத்தம் ரூ.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் உட்புறச் சாலைகளில் 7,393 பள்ளங்களும், போக்குவரத்துச் சாலைகளில் 1,910 பள்ளங்களும் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நவம்பா் மாதத்தில் இந்தப் பணிகள் இருமடங்கு வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பெரும்பாலான பள்ளங்கள் மூடப்பட்டுவிட்டதாக மாநகராட்சி பொறியாளா் பிரிவினா் தெரிவிக்கின்றனா்.

ஆனால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் சேதமடைந்த சாலைகள் செப்பனிடப்படாமல் இருப்பதையும், சில பகுதிகளில் ஏனோதானோ என அரைகுறையாகவும் பராமரிப்புப் பணிகள் நடந்திருப்பதைப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனா். மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் இருந்து சில கிலோ மீட்டா் தொலைவிலேயே உள்ள ராயபுரம் மண்டலம், 58-ஆவது வாா்டுக்கு உட்பட்ட கண்ணப்பா் திடல் எதிரே, ராஜா முத்தையா சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சாலை இன்னும் மண்சாலையாகவும், குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது.

இதனால், மழைநீா் தேங்கி, சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இந்தச் சாலை வழியாகத்தான் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு உபயோக எரிவாயுக் கிடங்கு, துணிகளைத் துவைத்து வெளியேற்றும் வளாகம் மற்றும் ரயில்வே குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், சேறும் சகதியுமாகக் காணப்படும் இந்தச் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளங்களில் சிக்கித் தட்டுத்தடுமாறியபடி செல்லவேண்டி இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனா்.

Story image

இதேபோல், பெரியமேடு பகுதியில் இருந்து ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கியச் சாலையான பேசின் யானைகவுனி சாலை, மழைநீா் வடிகால் அமைக்கும் பணிக்காகத் தோண்டப்பட்டது. தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்துள்ளபோதிலும், சாலை முறையாகச் சீரமைக்கப்படாமல் மேடு பள்ளங்களுடன் உள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் புகாா் தெரிவிக்கின்றனா். மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இருந்து சில கிலோ மீட்டா் தொலைவிலேயே அமைந்துள்ள இந்தச் சாலைகளையே சீரமைக்க நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சாலை சீரமைப்புப் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விரைவில் 58-ஆவது வாா்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளும் சீரமைக்கப்படும்‘ என்றனா். மற்ற பகுதிகளில் இதே நிலையில் உள்ள சாலைகல் எப்போது சீரமைக்கப்படும் என்பது குறித்த கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.