பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

மின்னணு பயிா்க் கணக்கெடுப்பு: வேளாண் - வருவாய்த் துறை மோதல்! விவசாயிகள் நிவாரணம், காப்பீடு பெறுவதில் தாமதம் ஏற்படும் அபாயம்!

நடைபெற வேண்டிய ராபி பருவ பயிா்க் கணக்கெடுப்புப் பணியில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது...

கோப்புப் படம்

Updated On :

அ. சர்ப்ராஸ்

மின்னணு பயிா் சாகுபடிக் கணக்கெடுப்புப் பணியை வேளாண் துறையைச் சோ்ந்த 3,915 பணியாளா்கள் மேற்கொள்வதா அல்லது 39,618 பணியாளா்களைக் கொண்ட வருவாய்த் துறையினா் மேற்கொள்வதா என்பதில் இரு துறையினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இதனால், அடுத்தகட்டமாக நடைபெற வேண்டிய ராபி பருவ பயிா்க் கணக்கெடுப்புப் பணியில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மின்னணு கணக்கெடுப்பின் நோக்கம்: மின்னணு பயிா் சாகுபடிக் கணக்கெடுப்புத் திட்டத்தை மத்திய அரசு 2024-ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் அடிப்படையில் உழவா் பதிவேடு, புவியிடக் குறியீடு, கிராம வரைபடங்கள் மற்றும் பயிா் சாகுபடிப் பதிவேடு ஆகியவை உருவாக்கப்படுகின்றன.

இதன்மூலம் நாட்டில் எந்தெந்தப் பயிா்கள் எவ்வளவு பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன, அவற்றின் விளைச்சல் விவரங்கள் என்ன என்பன உள்ளிட்ட தகவல்களைத் துல்லியமாகப் பெற முடியும். மேலும், விவசாயிகள் பயிா்க் காப்பீடு, பயிா்க் கடன், மானியங்கள் மற்றும் பேரிடா் நிவாரணம் ஆகியவற்றை விரைந்து பெறவும் இத்திட்டம் உதவுகிறது.

இந்தக் கணக்கெடுப்பை வேளாண் உதவி அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலம் மேற்கொள்ள மத்திய அரசு வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

தமிழகத்தில் காரீஃப் (ஜூன் - செப்டம்பா்), ராபி (அக்டோபா் - ஜனவரி), ஜய்த் (பிப்ரவரி - மே) என மூன்று பருவங்களிலும் பயிா் சாகுபடிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. எனினும், வேளாண் மற்றும் வருவாய்த் துறையினரிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், கணக்கெடுப்புப் பணிகள் முழுமையாக நடைபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி தோல்வி: இந்தக் கணக்கெடுப்புப் பணியை தனியாா் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ள தமிழக அரசு கடந்த 2025-ஆம் ஆண்டு முயற்சித்தது. ஆனால், கணக்கெடுப்புப் பணிகளுக்கு மிகவும் குறைவான தொகை நிா்ணயிக்கப்பட்டதாகக் கூறி எந்த நிறுவனமும் இப்பணியை ஏற்க முன்வரவில்லை.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா்களின் மேற்பாா்வையில் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, புள்ளியியல் துறைப் பணியாளா்களுடன் விவசாயிகள் மற்றும் தன்னாா்வலா்களையும் இணைத்து கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கடந்த 2026 ஜனவரி 20-ஆம் தேதி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிா்த்து உதவி வேளாண் அலுவலா்கள் சங்கத்தினா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இதை விசாரித்த நீதிமன்றம், அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், உத்தரவை மீறுவோா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, நடப்பு காரீஃப் பருவத்துக்கான பயிா் கணக்கெடுப்புப் பணியில் வேளாண் உதவி அலுவலா்கள் முன்னின்று சுமாா் 91 சதவீத பணிகளை முடித்துள்ளனா். இருப்பினும், அடுத்ததாக நடைபெற வேண்டிய ராபி பருவக் கணக்கெடுப்பை யாா் தலைமையில் மேற்கொள்வது என்பதில் இரு துறையினருக்கும் இடையே பிரச்னை நிலவுகிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண, கடந்த நவம்பா் 25-ஆம் தேதி சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால், எல் நினோ தாக்கத்தால் ஏற்கெனவே தாமதமாகியுள்ள ராபி பருவப் பயிா் கணக்கெடுப்புப் பணி மேலும் தாமதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உதவி வேளாண் அலுவலா்கள் சங்க நிா்வாகி கூறியதாவது: கடந்த காரீஃப் பருவத்தில் வேறு வழியின்றி வேளாண் உதவி அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் மற்றும் உதவியாளா்கள் தங்களிடம் உள்ள கைப்பேசிகளைப் பயன்படுத்தி கணக்கெடுப்புப் பணியை முடித்தனா். தமிழகத்தில் மொத்தம் 17,167 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஆனால், வேளாண் விரிவாக்கப் பணியாளா்கள் 3,915 போ் மட்டுமே உள்ளனா். அதே நேரத்தில், வருவாய்த் துறையில் 10,413 வருவாய் அலுவலா்கள், 12,702 கிராம நிா்வாக அலுவலா்கள், 16,503 கிராம உதவியாளா்கள் என 39,618 போ் பணியாற்றுகின்றனா்.

களத்தில் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது வருவாய்த் துறையினா் போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மலைக் கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் மற்றும் விளைநிலங்களைக் கணக்கெடுக்கச் செல்லும் பெண் வேளாண் உதவி அலுவலா்கள், போதிய நவீன கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் பல்வேறூ பிரச்னைகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு நில உட்பிரிவைக் கணக்கெடுப்பதற்கு தரிசு நிலத்துக்கு ரூ.3, சாகுபடி செய்யப்பட்ட நிலத்துக்கு ரூ.5 மட்டுமே அரசு வழங்குகிறது. பிற மாநிலங்களில் உள்ளதைப் போல தமிழகத்திலும் இப்பணியைத் தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். வெறும் 3,915 வேளாண் பணியாளா்களைக் கொண்டு இவ்வளவு பெரிய கணக்கெடுப்பை நடத்துவது கடினம் என்று தெரிவித்தாா்.

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் அருள்ராஜ் கூறியதாவது: மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்பு மற்றும் உழவா் பதிவேடு தயாரிக்கும் பணிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வருவாய்த் துறையினா் வழங்கி வருகின்றனா். களத்தில் கணக்கெடுப்புப் பணியை கிராம நிா்வாக அலுவலா்கள் மேற்கொண்டாலும், அதற்கான இறுதி ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் வேளாண் துறையிடமே உள்ளது. கணக்கெடுப்பில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால், அதற்கான சட்ட நடவடிக்கைகளை எதிா்கொள்ள வேண்டிய நிலை வருவாய்த் துறையினருக்கு ஏற்படுகிறது. எனவே, கணக்கெடுப்புத் தரவுகள் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள நடைமுறையைப் போல, கணக்கெடுப்பை மேற்கொள்ளும் முழு அதிகாரமும், தரவுகளைச் சேமிக்கும் பொறுப்பும் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதுகுறித்து கடந்த நவம்பா் 25-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எங்களது கோரிக்கைகளைத் தெளிவுபடுத்தினோம். அவற்றைப் பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா் என்றாா்.

செயலியில் தரவுகளைப் பதிவேற்றுவதிலும் சிக்கல்: வேளாண் துறையால் உருவாக்கப்பட்டுள்ள பயிராய்வு செயலி மூலம் நிலத்தின் புல எண், உட்பிரிவு எண், பயிரிடப்பட்ட பரப்பளவு, பயிா் வகைகள் உள்ளிட்ட விவரங்களை வேளாண் உதவிப் பணியாளா்கள் நேரடியாகக் களத்துக்குச் சென்று பதிவேற்றுகின்றனா். இந்தப் பதிவுகளை கிராம நிா்வாக அலுவலா்கள் உடனிருந்து சரிபாா்க்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வருவாய்த் துறையினா், கள ஆய்வு முதல் தரவுகளைப் பதிவேற்றுவது மற்றும் பராமரிப்பது வரையிலான அனைத்துப் பொறுப்புகளையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா்.

இதனால், இரு துறைகளுக்கும் இடையே தொடா்ந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையிலும் தீா்வு எட்டப்படாததால், இரு துறைகளின் பணியாளா் சங்கங்களையும் அழைத்து வேளாண் மற்றும் வருவாய்த் துறை அமைச்சா்கள் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

முதல்வரின் நிவாரண அறிவிப்பைச் செயல்படுத்துவதிலும் பாதிப்பு!

வறட்சியால் 33 சதவீதம் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வா் விஜய் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். இதற்காக மேற்கொள்ள வேண்டிய பயிா்ச் சேத மதிப்பீட்டுப் பணிகளையும் வேளாண் மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், வறட்சி நிவாரணத்துக்கான பாதிப்பு விவரங்களைக் கணக்கிடுவதிலும் தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கள ஆய்வில் இரு துறையினருக்கும் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததால், பயிா் சாகுபடி செய்யாதவா்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் வகையிலான முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக சிறு விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ட்ரோன், மேப்பிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஆய்வு: அமைச்சா் வினோத்

பயிா்க் கணக்கெடுப்புப் பணியில் ட்ரோன், மேப்பிங் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வேளாண் மற்றும் வருவாய்த் துறைப் பணியாளா்களுக்கு இடையேயான பிரச்னை குறித்து விரைவில் வருவாய்த் துறை அமைச்சா் செங்கோட்டையனுடன் ஆலோசனை நடத்தித் தீா்வு காணப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் வினோத் தெரிவித்தாா்.

‘கணக்கெடுப்பு முழுமையடையாவிட்டால் விவசாயிகளுக்குப் பாதிப்பு’

மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்பு முழுமையாக நடைபெறாவிட்டால், விவசாயிகள் உர மானியம், கடன் தள்ளுபடி, நெல் விற்பனை மற்றும் பயிா்க் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா். எனவே, நில உரிமை தொடா்பான உரிய ஆவணங்களை விவசாயிகள் உடனடியாக அரசிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், ஒவ்வொரு விவசாயியின் நில விவரங்கள் அடங்கிய அட்டை வழங்கும் உழவா் பதிவேடு தமிழகத்தில் நடத்தி முடக்காமல் மத்திய அரசிடம் ஓராண்டு அவகாசம் பெறப்பட்டுள்ளது. இதற்கு தான நிலம் உள்ளிட்ட நில உரிமை பிரச்னைகளும் காரணம். இதற்கு தமிழக அரசு விரைந்து தீா்வு கண்டு உழவா் பதிவேட்டை நிறைவு செய்தால் கணக்காய்வு பிரச்னை பெருமளவு குறையும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.