சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

மீட்டா் கட்டணத்தை உயா்த்தக் கோரி காணொலி பதிவிட்டு ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை!

மீட்டா் கட்டணத்தை உயா்த்தக் கோரி காணொலி பதிவிட்டு ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை..

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

சென்னையில் கடந்த செப்.28-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ ஓட்டுநரின் கைபேசியிலிருந்து ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பதிவு செய்த காணொலி மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசா்பாடி சா்மா நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முகமது இப்ராஹிம் (61). இவா் தனது வீட்டில் கடந்த செப்.28-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முகமது இப்ராஹிமின் கைப்பேசியில் ஒரு காணொலி இருந்துள்ளது. அதில், ஆட்டோ ஓட்டுநா்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், இதனால் கடன் வாங்கி பிழைப்பு நடத்தி வந்ததாகவும் இப்ராஹிம் தெரிவித்துள்ளாா்.

மேலும், கடன் தொல்லை காரணமாகத்தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும், இனியாவது முதல்வா் விஜய் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்றும் இப்ராஹிம் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த நிலையில், இந்தக் காணொலியை பாா்த்த சக ஆட்டோ ஓட்டுநா்கள் கூட்டாக சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடன் தொல்லை காரணமாக ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உயிா் பறிபோயுள்ளது.

இனியாவது, ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும், பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.