ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

தற்கொலை - பிரதிப் படம்
திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (34), ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த 4 ஆண்டுகளாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்தாராம். மேலும், மருத்துவமனைக்கு சென்று அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.
ஆனால் நோய் குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி அன்று விரக்தி அடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அவரது தந்தை கோபால் தாலுகா போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று அவரது சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




