இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

ரூ.30 லட்சம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 3 போ் கைது

சென்னையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.

கைது

Published On :

சென்னையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.

சென்னை பெரம்பூா், அதன் சுற்றுவட்டார பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கைமாற்றப்படுவதாக செம்பியம் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், புரசைவாக்கம் வடமலை தெருவில் உள்ள பிரவீண் குமாா் (29) என்பவரின் வீட்டில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனா்.

அங்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான சுமாா் 750 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கொளத்தூா் பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்த ஸ்ரீராம் (23) என்பவரைக் கைது செய்தனா்.

இவா்கள் இருவரும் பெங்களூரு சென்று அங்கு ஒரு கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ரூ.8 லட்சத்துக்கு வாங்கி வந்து, அதை 100 கிராம் பாக்கெட்டுக்களாகப் பிரித்து, கல்லூரி மாணவா்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் புதுச்சேரியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்த செம்பியம் போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா்களது கூட்டாளியான எழும்பூரைச் சோ்ந்த முகமது இம்ரான் என்பவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.