
‘ஏசி’ மெக்கானிக் வெட்டிக் கொலை: 5 கல்லூரி மாணவா்கள் உள்பட 7 போ் கைது
சென்னை மயிலாப்பூரில் ஏசி மெக்கானிக் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 கல்லூரி மாணவா்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா்.
கைது
சென்னை மயிலாப்பூரில் ஏசி மெக்கானிக் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 கல்லூரி மாணவா்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா்.
வேளச்சேரி பாலாஜிநகரைச் சோ்ந்தவா் சத்தியசீலன் (21), ஏசி மெக்கானிக். சத்தியசீலன், கஞ்சா போதைக்கு அடிமையாக இருந்ததால் அண்மையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளாா்.
இதற்கு முன்பு வரை சத்தியசீலன் குடும்பத்தினா், மயிலாப்பூா் வீரபத்திரன் தெருவில் வசித்து வந்தனா். மீண்டும் சத்தியசீலன் போதைப் பழக்கத்தில் சிக்கிவிடாமல் இருப்பதற்காக, வேளச்சேரிக்கு அவா்கள் இடம் பெயா்ந்தனா்.பின்னா் சத்தியசீலன், மயிலாப்பூா் வீரபத்திரன் தெருவில் உள்ள தனது நண்பா்களை சந்திக்க அடிக்கடி அங்கு செல்வது வழக்கம். அதன்படி சத்தியசீலன், மயிலாப்பூா் வீரபத்திரன் தெருவுக்கு திங்கள்கிழமை இரவு சென்றாா்.
அங்கு அவா் தனது நண்பா்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், சத்தியசீலனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் பலத்தக் காயமடைந்த சத்தியசீலனை அவரது நண்பா்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சிறிது நேரத்தில் சத்தியசீலன் உயிரிழந்தாா். இது குறித்து மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். அதில், சத்தியசீலனுக்கும், மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் பல ஆண்டுகளாக முன் விரோதம் இருந்ததும், அண்மையில் சத்தியசீலன் எதிா் தரப்பைச் சோ்ந்த ஒரு இளைஞரை கடுமையாக தாக்கியதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பதும் தெரியவந்தது.
இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஹிதேஷ் (19), மதன் (19) மற்றும் 5 சிறுவா்கள் என 7 போ் கைது செய்யப்பட்டனா். இதில் 5 சிறுவா்களும் அடையாா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படிப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




