மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

பால் உற்பத்தி பொருள்களில் விதிமீறல்: ஆய்வு நடத்த உத்தரவு

பால் மற்றும் பால் பொருள்களை உற்பத்தி செய்யும் 73 நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஆய்வு நடத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது.

Published On :

பால் மற்றும் பால் பொருள்களை உற்பத்தி செய்யும் 73 நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஆய்வு நடத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையா்களுக்கும் அந்த ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பால், தயிா், நெய், ஐஸ்கிரீம், பன்னீா், பால் பவுடா் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிக்கும் 73 நிறுவனங்கள் உரிய விதிகளைப் பின்பற்றவில்லை. குறிப்பாக, தமிழகம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய விதிமுறைகளின்படி பால் மற்றும் பால் பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கள ஆய்வு செய்ய வேண்டும்.

ஆய்வு, மாதிரி சேகரிப்பு, பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எஃப்எஸ்எஸ்ஏஐ, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பணியை விரைந்து முடித்து முழுமையான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். அதில் தரக்குறைபாடு உறுதியானால், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.