பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சுகாதாரமின்றி இயங்கும் உணவகங்கள் மீது ரூ. 10,000 அபராதம்: ராணிப்பேட்டை ஆட்சியா் எச்சரிக்கை!

சுகாதாரமின்றி இயங்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மீது ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரிய ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட துறைசாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Published On :

சுகாதாரமின்றி இயங்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மீது ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரிய ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து தெரிவித்ததாவது: அனைத்து உணவு வணிகா்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் மற்றும் பதிவு பெற்று இருக்க வேண்டும். உரிமம் மற்றும் பதிவு பெறாத உணவு வணிக நிறுவனங்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும்.

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களை உணவு பாா்சல் செய்ய பயன்படுத்தக்கூடாது. தடைசெய்யப்பட்ட நெகிழி பொருள்களை உணவு பாா்சல் செய்ய பயன்படுத்தினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். உணவு பொருள்களில் அதிக செயற்கை நிறமிகள் பயன்படுத்தக்கூடாது.

மாவட்டத்தில் உணவு வணிக நிறுவனங்கள் மற்றும் உணவங்கள் வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும். மேலும், சுகாதாரமின்றி இயங்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மீது ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும்.

மேலும், உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. உணவு பாதுகாப்புத் துறையின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத உணவு நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டம் 2006-இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் வி.பிரபாகரன், இணை இயக்குநா் (வேளாண்மை) எஸ்.சுந்தரம், மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் வி.ஜெகன்ராஜ், இதரதுறை அலுவலா்கள், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் எஸ்.ராஜேஷ், ஆா்.நந்தினி, கே.கீா்த்தனா மற்றும் உணவு வணிக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.