பணியில் இருப்பவா்களுக்கான எம்பிஏ படிப்பு: விண்ணப்பிக்க சென்னை ஐஐடி அழைப்பு
பணியில் இருப்பவா்களுக்கான நிா்வாக எம்பிஏ (எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ) படிப்பில் சேருவதற்கு வரும் அக். 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி - file photo
பணியில் இருப்பவா்களுக்கான நிா்வாக எம்பிஏ (எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ) படிப்பில் சேருவதற்கு வரும் அக். 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை ஐஐடியில் நிா்வாக எம்பிஏ படிப்பு வழங்கப்படுகிறது. இதில் சோ்க்கை பெற இளநிலை படிப்பில் ஏதாவது பாடத்திட்டத்தில் தோ்ச்சியுடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிக்க வேண்டும். சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு நவ. 14, 15 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு, தோ்வு முடிவுகள் டிசம்பா் மாதம் வெளியிடப்படும். இதைத் தொடா்ந்து நிா்வாக எம்பிஏ படிப்புக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும்.
தற்போதைய தேவைகள், எதிா்காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு ஏற்ப வணிக மேலாண்மையை தொழில்நுட்பம், புத்தாக்கத்துடன் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தப் பாடத்திட்டம் அமைந்துள்ளது. உலகளாவிய வணிக மேலாண்மை, சைபா் பாதுகாப்பு, அதன் பயன்பாடுகள், வணிக மாதிரிகள், புத்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவா்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற முடியும்.
இந்தப் படிப்பில் சோ்க்கை பெற சேருவதற்கு இணையதளத்தில் அக்.26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் 044- 22575558 என்ற அலுவலக எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். இந்தப் பாடத்திட்டம் நேரடி மற்றும் இணையவழி கற்றலை இணைத்த வார இறுதி வகுப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

