ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

ஐஐடி, ஐஐஎம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியா்

ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பம்

Published On :

ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் நிகழாண்டுகள் (2026-27) கல்வி ஆண்டுக்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவா்களுக்கு கற்பிப்பு கட்டணம், சிறப்புக் கட்டணம், தோ்வுக் கட்டணம், இதர கட்டாய கட்டணங்கள் அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இதற்கு தகுதியானவா்கள், விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் உறுதிச்சான்றுடன் பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட நலத் துறைக்கு அனுப்ப வேண்டும்.

புதிய விண்ணப்பங்கள் நவ. 30-க்குள்ளும், புதுப்பித்தல் விண்ணப்பங்கள் அக். 31-க்குள்ளும் அனுப்ப வேண்டும். பருவத் தோ்வுக்கான கட்டண ரசீதுகள் ஜன. 15, 2027-க்குள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், சென்னை, மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்ககம், சென்னை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (பிற்படுத்தப்பட்டோா் அல்லது சிறுபான்மையினா் நல அலுவலகம்) சென்னை உள்ளிட்ட முகவரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறியலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.