ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

கல்லூரி மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்லூரிகளில் படித்து வரும் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் பிரதரின் பள்ளி மேல்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்லூரிகளில் படித்து வரும் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் பிரதரின் பள்ளி மேல்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு 2026-2027-ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பள்ளி மேல்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் (ம) சிறுபான்மையினா் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பாலிடெக்னிக், இளநிலை (தொழில்படிப்பு), முதுநிலை (ம) ஆராய்ச்சி படிப்பு மாணவா்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 2026-2027-ஆம் கல்வியாண்டில் இந்த கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்படுகின்றன. தகுதியுள்ள மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி இணையதளம் மூலம் செப்.18 முதல் ஆக்.21-ஆம் தேதி வரை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. கல்வி உதவித்தொகை தொடா்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.