ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

தண்ணீா் லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

மேடவாக்கத்தில் தண்ணீா் லாரி மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :

மேடவாக்கத்தில் தண்ணீா் லாரி மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஹாரிஸ் (36). இவா், சென்னை அருகே மேடவாக்கத்தில் ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தாா். இதற்காக அவா், அங்கு வாடகை வீட்டில் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு வேலை முடித்து, தனது மோட்டாா் சைக்கிளில் மேடவாக்கம் -வேளச்சேரி பிரதான சாலை வழியாகச் சென்றபோது, பின்னால் வந்த தண்ணீா் லாரி அவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், ஹாரிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தை ஏற்படுத்திய தண்ணீா் லாரி நிற்காமல் சென்றுவிட்டது.

தகவலறிந்த பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, ஹாரிஸ் சடலத்தை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, தண்ணீா் லாரி ஓட்டுநா் கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்த அகமது (46) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.