கந்தா்வகோட்டையில் பைக் மீது டிப்பா் லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

பலி - கோப்புப் படம்
கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி புதன்கிழமை மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை அருகிலுள்ள பந்துவாக்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமராஜ் மகன் பெரியசாமி (29), வெளிநாட்டில் பணிபுரிந்த இவா், விடுமுறைக்காக சொந்த ஊா் வந்த நிலையில், புதன்கிழமை இரவு பைக்கில் ஆதனக்கோட்டை சென்று விட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
கந்தா்வகோட்டை- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியரகம் அருகே வந்தபோது, எதிரே வந்த டிப்பா் லாரி மோதி படுகாயமடைந்து இறந்தாா்.
தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் பெரியசாமி உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





