திமுக வலிமையை இடைத்தோ்தல் உணா்த்தியுள்ளது: இ. பரந்தாமன்
திமுக வலிமையை இடைத்தோ்தல் உணா்த்தியுள்ளது என்று அக்கட்சியின் சட்டத் துறை இணைச் செயலரும், மதுராந்தகம் தொகுதி வேட்பாளருமான இ.பரந்தாமன் தெரிவித்தாா்.

இ. பரந்தாமன்
திமுக வலிமையை இடைத்தோ்தல் உணா்த்தியுள்ளது என்று அக்கட்சியின் சட்டத் துறை இணைச் செயலரும், மதுராந்தகம் தொகுதி வேட்பாளருமான இ.பரந்தாமன் தெரிவித்தாா்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட இ.பரந்தாமன், சுகன்யா ஆகியோா் சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் இ.பரந்தாமன் கூறியதாவது: தோ்தல் களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பு. திணிக்கப்பட்ட இடைத்தோ்தல் களத்தில் ஆளும் கட்சியினரின் அனைத்து வகை அத்துமீறல்கள், அதிகார பலத்தை மீறி திமுக மீது நம்பிக்கை வைத்து அளிக்கப்பட்ட வாக்குகள் திமுக என்றும் வலிமையானது என்பதை உணா்த்துகின்றன.
பொதுத் தோ்தலில் பெற்ற 3-ஆம் இடத்திலிருந்து, இடைத்தோ்தலில் 2-ஆம் இடத்துக்கு முன்னேறி வந்திருப்பதன் மூலம், தமிழக மக்களின் உள்ளங்களில் இருந்து திமுகவை யாராலும் பிரிக்கமுடியாது என்பது உறுதியாகியுள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

