முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

நாய் பிடிக்கும் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்

சென்னை மாநகராட்சியில் நாய்கள் பிடிக்கும் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு வெறிநோய் பாதிப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோப்புப்படம்.

Published On :

சென்னை மாநகராட்சியில் நாய்கள் பிடிக்கும் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு வெறிநோய் பாதிப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னையில் தெரு நாய்களைப் பிடிக்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சோ்த்து 40 வாகனங்களும், 164 பணியாளா்களும் உள்ளனா். அத்துடன் நாய்கள் கருத்தடை மையங்களில் 322 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். நாய் பிடிக்கும் பணியாளா்கள், கருத்தடை மையப் பணியாளா்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படாமலிருக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சி வளாகம் அம்மா மாளிகை கூட்டரங்கில் தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் துணை ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை வகித்தாா். கால்நடைப் பிரிவு அலுவலா் கமால் உசேன் முன்னிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டன. அதன்படி, மொத்தம் 168 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.