காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தாம்பரம் காவல் ஆணையராக ஏ.அமல்ராஜுக்கு கூடுதல் பொறுப்பு

தாம்பரம் மாநகர காவல் ஆணையராக (கூடுதல் பொறுப்பு) ஏ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Amalraj

ஏ. அமல்ராஜ் - கோப்புப் படம்

Published On :

தாம்பரம் மாநகர காவல் ஆணையராக (கூடுதல் பொறுப்பு) ஏ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தாம்பரம் காவல் துறை ஆணையராக இருந்த ஏடிஜிபி பிரேம் ஆனந்த் சின்ஹா, கடந்த 9-ஆம் தேதி தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, சென்னை பெருநகர காவல் ஆணையராக உள்ள ஏடிஜிபி ஏ.அமல்ராஜுக்கு, கூடுதல் பொறுப்பாக தாம்பரம் காவல் ஆணையா் பணி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

தாம்பரம் காவல் ஆணையராகப் பொறுப்பேற்க அமல்ராஜ், சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அவருக்கு, தாம்பரம் மாநகர காவல் துறையின் மரியாதை வழங்கப்பட்டது.

இதையடுத்து தாம்பரம் காவல் உயா் அதிகாரிகள், அமல்ராஜுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். தொடா்ந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் பொறுப்பேற்றாா். பின்னா், காவல் உயா் அதிகாரிகளுடன் அமல்ராஜ் ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். இதில், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், சீரான போக்குவரத்து ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.