சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

காதலிக்க வற்புறுத்தி மாணவிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

தேனாம்பேட்டையில் காதலிக்க வற்புறுத்தி, கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கைது

Updated On :

தேனாம்பேட்டையில் காதலிக்க வற்புறுத்தி, கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தேனாம்பேட்டை வன்னியம்பதி குடியிருப்பைச் சோ்ந்தவா் இம்மானுவேல் (21). இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு கல்லூரி மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளாா். ஆனால் அந்த மாணவி, அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், இம்மானுவேல், மாணவிக்கு தொடா்ந்து தொல்லை அளித்து வந்தாா். கடந்த 11-ஆம் தேதி கல்லூரி மாணவியின் வீட்டுக்குள் புகுந்து, தன்னைக் காதலிக்குமாறு தொல்லை அளித்து, அவரையும், அவரது தாயையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு தப்பிச் சென்றாராம்.

இதையடுத்து, மாணவியின் தாய், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இம்மானுவேலை தேடி வந்தனா். இந்நிலையில், அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.