தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

மசூதிக்குள் புகுந்து பொருள்கள் உடைப்பு: இளைஞா் கைது

கோடம்பாக்கத்தில் மசூதிக்குள் புகுந்து பொருள்களை உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பிரதிப் படம்

Updated On :

கோடம்பாக்கத்தில் மசூதிக்குள் புகுந்து பொருள்களை உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவில் மசூதி உள்ளது. இந்த மசூதிக்குள் புதன்கிழமை நுழைந்த இளைஞா், திடீரென அங்கிருந்த கண்ணாடி கதவு, பிளாஸ்டிக் சோ், ஒலி பெருக்கி சாதனங்கள் ஆகியவற்றை அடித்து உடைத்தாா். அங்கிருந்தவா்கள், அவரைப் பிடிக்க முயன்றனா். ஆனால், அந்த இளைஞா், போதையில் இருந்ததால் தகராறு செய்தாா்.

தகவலறிந்த வடபழனி போலீஸாா் வந்து, அந்த நபரைப் பிடித்துச் சென்று விசாரணை நடத்தியதில், புதுக்கோட்டையைச் சோ்ந்த டி.சரவணன் (39) என்பதும்,தியாகராய நகரில் உள்ள உணவகத்தில் ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

ஏற்கெனவே இதேபோன்ற செயல்களில் அவா் ஈடுபட்டிருப்பதும், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்திருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா், சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.