சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்! 137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

தொடர் மழை: வேளச்சேரியில் தண்ணீரில் மூழ்கிய கார், இருசக்கர வாகனங்கள்!

வேளச்சேரியில் மழை நீரில் மூழ்கிய கார், இருசக்கர வாகனங்கள் குறித்து....

rain

வேளச்சேரியில் தண்ணீரில் மூழ்கிய கார், இருசக்கர வாகனங்கள். - படம்: தினமணி

Updated On :

சென்னையில் தற்போது பெய்து வரும் கனமழையால், வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கி வெள்ளம் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தாழ்வான குடியிருப்புப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அக்டோபர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், வேளச்சேரியில் பல இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக, குடியிருப்புப் பகுதிகள் மட்டுமின்றி சாலைகளிலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேளச்சேரியில் தேங்கிய மழைநீரில் கார் ஒன்று முழுமையாக மூழ்கியிருக்கும் காட்சிகளும், இருசக்கர வாகனங்கள் மழைநீரில் மூழ்கிக் கிடக்கும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஒவ்வொரு மழைக்காலத்திலும் வேளச்சேரியின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தேங்கிய மழைநீரை விரைந்து வெளியேற்றுவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க நிரந்தர வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Summary

Due to the heavy rains currently falling in Chennai, rainwater has once again accumulated in various parts of Velachery, creating a flood-like situation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.