இரவு 7 மணி வரை சென்னை உள்பட 28 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

கோப்புப் படம் - IANS
அடுத்த 3 மணி நேரத்துக்கு 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக். 17) தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) தமிழகத்தின் திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, தென்காசி, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary
TN rain update for next 3 hours in chennai and tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


