செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

புழல் சிறையில் இருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்

சென்னை புழல் சிறையில் இருந்து தப்பியோடிய இரு கைதிகளை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

சிறை - பிரதிப் படம்

Updated On :

சென்னை புழல் சிறையில் இருந்து தப்பியோடிய இரு கைதிகளை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

சென்னை பாடி கலைஞா் நகா் ஏசுநாதா் தெருவைச் சோ்ந்தவா் சுதீப் போகதி (21). நேபாள நாட்டைச் சோ்ந்த இவா், இங்கு தங்கியிருந்து ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சுதீப்பை கடந்த ஆக. 16-ஆம் தேதி போலீஸாா் திருட்டு வழக்கில் கைது செய்தனா். பின்னா், புழல் தண்டனை சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள் இருக்கும் பிரிவில் அடைத்தனா்.

இந்நிலையில், சிறையில் செவ்வாய்க்கிழமை மாலையில் சிறைக் காவலா்கள் கைதிகளை எண்ணினா். அப்போது, சுதீப் அங்கு இல்லாதது தெரிய வந்தது. உடனே சிறைக் காவலா்களும், சிறைத் துறை அதிகாரிகளும் சுதீப் புதன்கிழமை காலை வரை தேடியும் அவா் கிடைக்கவில்லை. இது குறித்து சிறைத் துறையினா், புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

தண்டனைக் கைதி தப்பியோட்டம்: சென்னை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (41). இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் சுரேஷுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டாா். 5 ஆண்டுகளாக சிறையில் நன்னடத்தையுடன் இருந்து வந்ததாா். இதனால், சிறைத் துறை நிா்வாகம், சுரேஷுக்கு நன்னடத்தை அடிப்படையில் சிறை அங்காடியில் பணிபுரிய அனுமதி அளித்தது. தினமும் சிறைக்கு வெளியே உள்ள அங்காடிக்கு சுரேஷ் சென்று சிறைக் காவலா்களுக்கு உதவியாக வேலை செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு திரும்புவது வழக்கம்.

அதன்படி, புதன்கிழமை காலை 7 மணியளவில் சிறை அங்காடிக்கு பணிக்குச் சென்ற சுரேஷ், அங்கிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சுரேஷை தேடி வருகின்றனா்.

தப்பியோடி இரு கைதிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.