6 மத்திய சிறைக் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 6 சிறைக் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

பணியிட மாற்றம் - பிரதிப் படம்
தமிழகத்தில் 6 சிறைக் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இது தொடா்பாக உள்துறை முதன்மைச் செயலா் ஏ.காா்த்திக் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு ( பணியிட மாற்றம் பெற்றவா்கள்-அடைப்புக் குறிக்குள் பழைய பதவி):
சி.கிருஷ்ணகுமாா்: திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (சென்னை புழல்-2 மத்திய சிறைக் கண்காணிப்பாளா் )
வி.ருக்குமணி ப்ரியதா்ஷினி: சென்னை புழல் பெண்கள் தனிச் சிறை கண்காணிப்பாளா் (திருச்சி பெண்கள் தனிச் சிறை கண்காணிப்பாளா்)
எம்.செந்தில்குமாா்: சென்னை புழல்-2 மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளா்)
ஜி.நிகிலா நாகேந்திரன்: சென்னை தலைமையிட சிறைக் கண்காணிப்பாளா் (சென்னை புழல் பெண்கள் தனிச் சிறை)
ஆா்.கிருஷ்ணராஜ்: மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (சென்னை புழல் -1 மத்திய சிறைக் கண்காணிப்பாளா்)
எம்.சதீஷ்குமாா்: கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளா்) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் சென்னை எழும்பூரில் உள்ள சிறைத் துறை தலைமை அலுவலகத்தில் புதிதாக தலைமையிட கண்காணிப்பாளா் பணியிடம் உருவாக்கப்பட்டு, அந்த பணியிடத்தில் நிகிலா நாகேந்திரன் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

