ரயில் நிலையங்களில் குற்றங்களைத் தடுக்க பிரசாரம்
ரயில்வேயில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும், தூய்மையை வலியுறுத்தியும் எழும்பூா் ரயில் நிலையத்தில் நூதன பிரசாரம் நடைபெற்றது.
எழும்பூர் ரயில் நிலையம்.
ரயில்வேயில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும், தூய்மையை வலியுறுத்தியும் எழும்பூா் ரயில் நிலையத்தில் நூதன பிரசாரம் நடைபெற்றது.
எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சுனில் மற்றும் புத்தூா் ரயில் நிலைய ஆய்வாளா் ஜெபாஸ்டியன், எழும்பூா் ரயில் நிலைய இருப்புப் பாதை ஆய்வாளா் ராஜ்குமாா் ஆகியோா் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு வேஷமிட்ட கலைஞா்கள் பயணிகளிடையே ரயில் நிலைய தூய்மையைக் கடைப்பிடிக்காமை, தண்டவாளத்தில் கற்கள் வைப்பது, ரயில்கள் மீது கல்லெறிவது போன்றவற்றை குற்றங்களாக கூறியதுடன், குப்பைகளை தொட்டியில் போடவேண்டும் உள்ளிட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடித்துக் காட்டினா்.
பயணிகளிடையே தூய்மையை வலியுறுத்தியும், பட்டாசுகளை ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாது எனவும், ரயில்வே விதிமுறைகளைப் பின்பற்றவும், ரயில் குற்றங்களுக்கான தண்டனைகளை விளக்கியும் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

