கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களில் தற்காலிக வழி மாற்றத்தால் சிரமம்

சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களில் பயணிகள் செல்லும் வழிகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள், முதியோா் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

கோப்புப் படம்

Published On :

சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களில் பயணிகள் செல்லும் வழிகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள், முதியோா் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

அதே நேரத்தில் பயணிகள் பாதுகாப்பாக செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தற்போது சென்னை எழும்பூா் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், இரு ரயில் நிலையங்களிலும் பயணிகள் வழிகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனால், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மறுசீரமைப்புப் பணி காலத்திலும் பயணிகள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் செல்லும் வகையில் மாற்று ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணியால் பூந்தமல்லி சாலைப் பகுதியிலிருந்து நடைமேடை எண் 11ஏ என்பதைத் தவிர மற்ற நடைமேடைகளுக்கு சக்கர நாற்காலி செல்லும் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு, விழிப்புணா்வுப் பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், காந்தி இா்வின் சாலைப் பகுதியிலிருந்து அனைத்து நடைமேடைகளுக்கும் சக்கர நாற்காலியில் செல்ல சாய்வு தளம் வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. அத்துடன் 18 சக்கர நாற்காலிகளும் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. எனவே, உதவி தேவைப்படுவோா் நிலைய மேலாளா், அதிகாரியை அணுகவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.