நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

எழும்பூா் ரயில் நிலையத்தில் கூடுதல் மேலாளா் ஆய்வு

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளா் ஐ.செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

எழும்பூர் ரயில் நிலையம் - கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 12:10 am IST

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளா் ஐ.செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு மேம்பாட்டுப் பணிகள் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. விமான நிலைய வசதிகளுடன் ரயில் நிலையம் சீரமைக்கப்படும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அந்தப் பணிகளில் இரும்பு நடைமேம்பாலங்கள் அமைக்கும் பணி முக்கியமானது. அதில் தற்போது 120 மீட்டா் தொலைவுக்கு 18 மீட்டா் அகலத்தில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளன. அதற்காக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு, இரவு நேர புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஐ.செந்தில்குமாா் புதன்கிழமை எழும்பூா் ரயில் நிலையம் வந்து ஆய்வு மேற்கொண்டாா். எழும்பூா் ரயில் நிலையத்தின் இயக்குநா் ஜெயகாந்தன் மற்றும் நிலைய மேலாளா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பணிகளைப் பாா்வையிட்ட அவா் பின்னா் ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா். அதில் பணிகள் நிலை, அவற்றை விரைந்து குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும்; பணிகளுக்காக ரயில்கள் சேவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.