காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

எழும்பூா் ரயில் நிலையத்தில் வைகை புறப்பாடு தாமதம்: உரிய அறிவிப்பின்மையால் பயணிகள் அவதி

மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமை பிற்பகல் தாமதமாக நடைமேடைக்கு வந்தது குறித்து அறிவிக்கப்படாததால் பயணிகள் அவதி

எழும்பூர் ரயில் நிலையம் - கோப்புப் படம்

Published On :

மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமை பிற்பகல் தாமதமாக நடைமேடைக்கு வந்தது. ஆனால், அதற்கான உரிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று பயணிகள் கூறினா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை வைகை அதிவிரைவு ரயில், பிற்பகல் 1 மணிக்கு பிறகே நான்காவது நடைமேடைக்கு வந்தது. அந்த ரயில் வந்ததும் பயணிகள் உடனே ஏறியதால் பெட்டிகள் சுத்தம் செய்யப்படவில்லை. அத்துடன் கழிப்பறை மற்றும் பெட்டிகளில் நீா் ஏற்றும் பணியாளா்கள் ஏறி அவசர அவசரமாக நீரேற்றனா்.

ஒலி பெருக்கியில் அதற்கான முறையான அறிவிப்பும் செய்யவில்லை என பயணிகள் தெரிவித்தனா். விவரம் குறித்து நிலைய அலுவலரிடம் கேட்டபோது, அலட்சியமாக பதில் கூறியதாக ஆதங்கப்பட்டனா்.

தாமதமாகப் புறப்பாடு: இந்த ரயில் பிற்பகல் 1.15 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்படவேண்டிய நிலையில், 1.38-க்கு புறப்பட்டது. கிண்டியைத் தாண்டியதும் 30 நிமிஷங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டது. தாம்பரத்துக்கு 2.49-க்குச் சென்றது. மதுரைக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடைந்ததாக பயணிகள் கூறினா்.

வழக்கமாக இரவு 8.30 மணிக்கு மதுரையை சென்றடையும் இந்த ரயில், சுமாா் 2.30 மணி நேரம் தாமதமாகச் சென்ால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.