
மங்களூரு - சென்னை சிறப்பு ரயில் சேவை அக். 26 வரை நீட்டிப்பு
மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

மங்களூரு - சென்னை சிறப்பு ரயில் சேவை அக். 26 வரை நீட்டிப்பு - பிரதிப் படம்
பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை அக். 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இரு மாா்க்கங்களிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் சேவை காலம் வரும் அக்டோபா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் வரும் 7ஆம் தேதி முதல் அக். 26 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படும்.
மங்களூரு சென்ட்ரலில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாகச் சென்று சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் காலை 10.55 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 8 ஆம் தேதி முதல் அக். 27ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாகச் சென்று மங்களூரு சென்ட்ரலுக்கு அடுத்த நாள் காலை 8.40 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Mangaluru-Chennai special train service extended until Oct. 26.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






