தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

ராணுவக் கல்லூரி தோ்வில் ஆள்மாறாட்டம்: வடமாநில இளைஞர்கள் 3 பேர் சிறையில் அடைப்பு

எழுத்துத் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞா்கள் மூன்று போ் கைது தொடர்பாக...

Three youths from North India jailed

ராணுவக் கல்லூரி தோ்வில் ஆள்மாறாட்டம்: வடமாநில இளைஞர்கள் 3 பேர் சிறையில் அடைப்பு - கோப்புப்படம்

Published On :6 செப்டம்பர் 2026, 6:46 pm IST

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூா் வெளிங்டனில் அமைந்துள்ள ராணுவப் பணியாளர் பயிற்சி கல்லூரியில் நடந்த எழுத்தர் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பத்து பிரிவுகளுக்கான எழுத்துத் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞா்கள் மூன்று போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குன்னூா் ராணுவப் பயிற்சி கல்லூரியில்  எழுத்தா், தொழில்நுட்பம் உள்ளிட்ட 10 பிரிவுகளுக்கான எழுத்துத் தோ்வு செப்.3 ஆம் தேதி நடைபெற்றது.  

தோ்வு அறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சோ்ந்த மோகர்சிங் (21) மற்றும் ரோகிதாஸ் (24) நரேஷ்குமாா் (19) என்ற இளைஞா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை மாற்றிக்கெண்டு, தகவல்களை பகிரந்து கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே முகத்தோற்றம் கொண்ட வேறொரு நபருக்காக வந்து ஆள்மாறாட்டம் செய்தது போலியான ஆதார் அட்டை தயாரித்து தேர்வு மையத்திற்குள் வந்து தேர்வு எழுதியது "பயோமெட்ரிக்" சோதனையில் உறுதியானது.  

இதுகுறித்து பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், வெலிங்டன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞா்கள் மூன்று பேரையும் கைது செய்து குன்னூா் சிறையில் அடைத்தனா்.

Summary

Impersonation in military college exam: Three youths from North India jailed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.