பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

நேபாள வெள்ளம்! பலியானோர் குடும்பங்களுக்கு வடகொரிய அதிபர் இரங்கல்!

நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு வடகொரிய அதிபர் இரங்கல்...

nepal floods

நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இரங்கல்... - ஏபி

Updated On :

நேபாள வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானததைத் தொடர்ந்து, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் நேபாள அதிபர் ராம் சந்திர பௌடல் ஆகியோரிடம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திபெத்தின் எல்லையில் அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடே கோஷி ஆற்றில், கடந்த ஆக. 26 ஆம் தேதி பனிப்பாறை உடைந்து திடீரென மாபெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் அங்குள்ள கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்ததுடன், 500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன இந்தியர்கள் உள்பட சுமார் 1,500 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி மக்கள் பலியானதைத் தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங் மற்றும் நேபாள அதிபர் பௌடல் ஆகியோருக்கும், இருநாடுகளின் அரசுகள் மற்றும் பலியானவர்களின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாகக் கூறி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இன்று (ஆக. 28) செய்தி வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, திபெத் பகுதியிலிருக்கும் அணை ஒன்று உடைந்தது மற்றும் புதியதாக உருவான ஏரிகளால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதாகக் கூறி அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல நேபாளம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Following the deaths of hundreds of people in the Nepal floods, North Korean leader Kim Jong Un has conveyed his condolences.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.