தில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!அபிஜீத் தீப்கே, நேஹா போராவுக்கு தடுப்புக்காவல்!தேசியக் கொடி பேரணி செல்ல முயன்ற அபிஜித் தீப்கே கைது!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 94.92 ஆக நிறைவு!இந்தியப் பங்குச் சந்தை 2வது நாளாக உயர்வு!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

அடுத்த 72 மணிநேரத்தில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறதா? சீனா எச்சரிக்கை

நேபாளத்தின் எல்லை அருகே தடுப்பு ஏரி உடைந்து வெள்ளம் ஏற்படுவது குறித்து...

Nepal flood

நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு - AP

Updated On :

நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, இயற்கை ஏரி உருவாகி, மீண்டும் ஒரு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேபாளத்தின் எல்லைக்கு அருகில் சோசென் கோலா - புரேபு சாங்போ ஆறுகள் இணையுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், திடீரென பெரிய தடுப்பு ஏரி உருவாகியுள்ளதாக சீன நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. இயற்கையாக உருவாகியுள்ள இந்த பெரிய தடுப்பு ஏரியில், வியாழக்கிழமை (ஆக. 27) காலை நிலவரப்படி நீர் கொள்ளளவு 20 லட்சம் கன மீட்டராக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 நாள்களுக்குள் ஏரியின் கொள்ளளவு 30 லட்சம் கன மீட்டராக அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ஏரியின் கொள்ளளவு அதிகரிப்பால், இந்த இயற்கையான தடுப்பு உடைந்து இரண்டாம் கட்ட வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன நாட்டின் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து, ஏரியின் நிலவரங்களை சீன அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஏரி உடைந்தால் அதனை எதிர்கொள்வதற்கான அவசர மீட்பு நடவடிக்கைகளிலும் சீனா ஈடுபட்டுள்ளது.

Summary

China warns Nepal barrier lake could breach within 72 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.