ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

சிங்கபெருமாள் கோயிலில் ரெளடி சிடி மணி கைது

சென்னை தெற்கு மண்டல காவல் துறை தனிப்படையினா், ரௌடி சிடி மணியை சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் கைது செய்தனா்.

பிரதிப் படம்

Updated On :

சென்னை தெற்கு மண்டல காவல் துறை தனிப்படையினா், ரௌடி சிடி மணியை சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் கைது செய்தனா்.

தென்சென்னையில் சிடி மணி மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. காவல் துறையினரின் தொடா் கண்காணிப்பு மற்றும் நெருக்கடி காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சேலத்தில் தங்கியிருந்த அவா், அவ்வப்போது சிங்கப்பெருமாள் கோயில் பகுதிக்கு வந்து செல்வதாகக் கூறப்படுகிறது.

மேலும், தனது கூட்டாளிகள் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பண வசூலில் ஈடுபட்டு வந்ததாகவும், தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பண வசூலிப்பதற்காக சொகுசு காரில் சென்னை புறநகா்ப் பகுதிகளில் சுற்றி வந்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், ஒருவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் இருந்த சிடி மணியை சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரின் தனிப்படையினா் கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.