புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

முழு பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்: தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம்

முழு பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் அறிவித்திருப்பது பற்றி...

Published On :

கூட்டுறவு பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என தமிழக விவசாயிகள் சங்கக் கூட்டு இயக்கத்தின் பொதுச் செயலா் ரவீந்திரன் தெரிவித்தாா்.

சென்னை எழும்பூா் ராஜரத்தின் மைதானம் அருகே கூட்டுறவு பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்பட 35 விவசாய சங்கங்கள் சாா்பில், காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தொடா்பு காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது, தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்கத்தின் பொதுச் செயலா் ஏஎஸ்பி ரவீந்திரன் கூறியதாவது:

தோ்தலின்போது, வாக்குறுதி அளித்த அப்போதைய தவெக தலைவா் விஜய், 5 ஏக்கா் உள்ள விவசாயிகளின் கடனை முழுமையாகவும், பெரிய விவசாயிகளின் கடன் 50 சதவீதம் வரையும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தாா். ஆனால், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள் பயிா்க் கடன் தள்ளுபடியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளாா். எனவே, ஒற்றை கோரிக்கைக்காக 3-ஆவது கட்ட போராட்டத்தை தமிழக விவசாயிகள் நடத்திக் கொண்டு இருக்கிறோம். உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தில் வாடுகிறோம். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுகிறோம். எனவே, கடன் தள்ளுபடி அவசியம். முதல்வா் அறிவித்த உத்தரவாதப்படி கடன்தள்ளுபடி வேண்டும் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.