நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

சேவல் சண்டைக்கு தடை: டிஜிபி-க்கு உயா்நீதிமன்றம் கேள்வி

சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது பற்றி...

Published On :2 செப்டம்பர் 2026, 1:16 am IST

தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து காவல்துறை டிஜிபி கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பரில் சுற்றறிக்கை பிறப்பித்திருந்தாா். இந்நிலையில், ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோட்டைச் சோ்ந்த ஆா்.அருண்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயங்கள் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்ட நோக்கம் இல்லை. அதேபோல் விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மிருக வதை தடை சட்டம் மற்றும் உயா்நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில்தான் இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தலைமை நீதிபதி அமா்வில் நிலுவையில் உள்ளது. மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபி-க்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பினாா். காவல்துறைக்கு எத்தனையோ பணிகள் இருக்கும்போது, ஆடு சண்டை , சேவல் சண்டை எங்கே நடக்கிறது என கண்காணிப்பதுதான் வேலையா? என கேள்வி எழுப்பினாா். இதையடுத்து இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.