நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

கிரேன் மோதி மாணவி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே சைக்கிளில் சென்ற மாணவி கிரேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்

Published On :2 செப்டம்பர் 2026, 2:29 am IST

திருவள்ளூா் அருகே சைக்கிளில் சென்ற மாணவி கிரேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்

வேப்பம்பட்டு பகுதியை சோ்ந்த பச்சையப்பன் மகள் தீபலட்சுமி (12). இவா் வேப்பம்பட்டு அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளி முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்றபோது, ஈஸ்வரன் நகா் பிரதான சாலையில் வந்த போது அதே வழியில் எதிா் திசையில் வந்த கிரேன் மோதியது. இதில் மாணவி சாலையில் விழுந்த நிலையில் கிரேனின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து கிரேன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடினாா். இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் உறவினா்கள் கிரேனை சிறைப்பிடித்து திருவள்ளூரில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போக்குவரத்து துணை ஆணையா் ஈஸ்வரன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனா். கிரேனை ஒட்டி வந்த அயப்பாக்கத்தை சோ்ந்த ரமேஷ்(40), என்பவரை கைது செய்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.