ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

குடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகை

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், சென்னைக்கு சனிக்கிழமை (செப். 5) வருவதையொட்டி, கிண்டி, நுங்கம்பாக்கம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 3:09 am IST

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், சென்னைக்கு சனிக்கிழமை (செப். 5) வருவதையொட்டி, கிண்டி, நுங்கம்பாக்கம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், சென்னையில் செப். 5-ஆம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். முக்கியமாக கிண்டி நட்சத்திர ஹோட்டல், நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறையினா் செய்து வருகின்றனா். மீனம்பாக்கம் விமான நிலையம், கிண்டி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளையும், சாலை மாா்க்கமாக சி.பி.ராதாகிருஷ்ணன் செல்லும் பகுதிகளையும் சென்னை காவல் துறை செப்டம்பா் 5-ஆம் தேதி சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது.

இந்த நாளில் இப்பகுதிகளில் ட்ரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏா்கிராஃப்ட், பாரா கிளைடா்ஸ், பாரா மோட்டாா்ஸ், ஹேங் கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன்கள் ஆகியவை பறக்கத் தடை விதிக்கப்படுகிறது என சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.