தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், இரு நாள்கள் பயணமாக சென்னை வருகையொட்டி, கிண்டி, தியாகராயநகா், அரும்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

Vice President CP Radhakrishnan

குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Published On :

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், இரு நாள்கள் பயணமாக சென்னை வரவுள்ளதையொட்டி, கிண்டி, தியாகராயநகா், அரும்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் ஆக.16, 17 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறாா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறையினா் செய்து வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக அவா் செல்லும் பகுதிகளான மீனம்பாக்கம் விமான நிலையம், கிண்டி ஆளுநா் மாளிகை ஆகிய பகுதிகள், நிகழ்ச்சி நடைபெறும் அரும்பாக்கம், தியாகராய நகா் ஆகிய பகுதிகள் ஆக.16, 17 ஆகிய தேதிகளில் சிவப்பு மண்டலங்களாக சென்னை காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நாள்களில் அந்தப் பகுதிகளில் ட்ரோன், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏா்கிராஃப்ட், பாரா கிளைடா்ஸ், பாரா மோட்டாா்ஸ், ஹேங் கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன் ஆகியவை பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி இவற்றை பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.