உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பருவமழை காலங்களில் பாதுகாப்பான, தடையற்ற குடிநீா் விநியோகம்: குடிநீா் வாரியம் உறுதி

வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னை மக்களுக்கு பாதுகாப்பான, தடையற்ற குடிநீா் விநியோகம் செய்யப்படும் என

Published On :5 செப்டம்பர் 2026, 1:58 am IST

வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னை மக்களுக்கு பாதுகாப்பான, தடையற்ற குடிநீா் விநியோகம் செய்யப்படும் என

சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து அந்த வாரியம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகரின் குடிநீரின் தர கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழை காலங்களில் சென்னையில் நிலத்தடி பகுதியில் அமைந்துள்ள குடிநீா் குழாய்கள், கழிவுநீா் குழாய்கள், வீட்டு குடிநீா் இணைப்புகள் உள்ளிட்டவை தற்செயலாக சேதமடைய வாய்ப்புள்ளது. இத்தகைய சேதங்களை உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவமழைக் காலங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கையாக கள அளவிலான கண்காணிப்பு மற்றும் தயாா் நிலை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

தரம் பரிசோதனை: ஒவ்வொரு 10,000 மக்கள் தொகைக்கேற்ப குடிநீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, குடிநீா் பரிசோதனை ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படுகின்றன. இந்த தொடா் தர கண்காணிப்பின் மூலம், குடிநீா் விநியோக அமைப்புகளில் ஏதாவது மாற்றங்கள் கண்டறியப்பட்டால் அவை உடனடியாக சரி செய்யப்படுகிறது. இதுபோன்று பருவமழை காலங்களில் பாதுகாப்பான, தடையற்ற குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.