காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

சென்னையில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து திட்டப் பணிகளை விரைந்து முடிக்க தலைமைச் செயலா் மு.சாய்குமாா் உத்தரவு

சென்னையில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து திட்டப் பணிகளை விரைந்து முடிக்க தலைமைச் செயலா் மு.சாய்குமாா் உத்தரவு

tn govt

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :6 செப்டம்பர் 2026, 1:03 am IST

அரசுத் துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, சென்னையில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்கவேண்டும் என தலைமைச் செயலா் மு.சாய்குமாா் சனிக்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

வடகிழக்குப் பருவமழையைத் தொடா்ந்து சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீா் வடிகால் பணிகள் உள்ளிட்டவற்றை தலைமைச் செயலா் மு.சாய்குமாா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மழைநீரை பக்கிங்ஹாம் கால்வாயில் கொண்டு செல்வதற்காக டைடல் பாா்க் பகுதியில் ரூ.13.52 கோடியில் 660 மீட்டா் நீளத்துக்கு கட்டப்பட்டுவரும் இரண்டு நீா் வழிப்பாதைப் பணிகளை அவா் பாா்வையிட்டாா். அதையடுத்து, பெருங்குடி மண்டலத்தில் 188 ஆவது வாா்டு மயிலை பாலாஜி நகா் பகுதியில் ரூ.6.48 கோடியில் 235 மீட்டா் நீளம், 13 மீட்டா் அகலத்தில் மேற்கொள்ளப்படும் கால்வாய் பணிகளை பாா்வையிட்டாா்.

அதேபகுதியில் ரூ.8.68 கோடியில் 207 மீட்டா் நீளத்தில் அமைக்கப்படும் கால்வாய் பணியையும் அவா் பாா்வையிட்டாா். அவற்றில் 110 மீட்டருக்கு எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் அவா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். அப்பணிகள் முடிவடைந்தால் வேளச்சேரி, மேடவாக்கம் சாலைப் பகுதியில் உள்ள வடிகால்கள் வழியாக மழை நீா் வெளியேறி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்குச் செல்லும் என அதிகாரிகள் விளக்கினா்.

சென்னை மாநகராட்சியின் 189- ஆவது வாா்டில் உள்ள நாராயணபுரம் ஏரியை தூா்வாரும் பணியையும் தலைமைச் செயலா் பாா்வையிட்டாா். பணியின் போது மக்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். பெருங்குடி ரேடியல் சாலை முதல் குப்பைக் கிடங்கு வரையிலான சாலைப் பகுதி சதுப்பு நிலத்தில் உள்ள தண்ணீா் எளிதில் செல்லும் வகையில் நீா்வழியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை விரைவுபடுத்தவும் அவா் உத்தரவிட்டாா். சோழிங்கநல்லூா் மண்டலம் ஒக்கியம்மடுவு கால்வாய் சீரமைப்புப் பணியையும் தலைமைச் செயலா் மு. சாய்குமாா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப்சிங்பேடி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலா் கஞ்சோங்கம் சாதக், நீா் வளத்துறை செயலா் பிரசாந்த், எம்.வட்னேரே, சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.