சென்னைப் பல்கலை.யில் பயிலரங்கு: 40 நாடுகளின் நிபுணா்கள் பங்கேற்பு

5 நாள் சா்வதேசப் பயிலரங்கு சென்னை கிண்டி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

சென்னைப் பல்கலைக்கழகம்

Published On :8 செப்டம்பர் 2026, 5:16 am IST

சென்னைப் பல்கலைக்கழகத்தின் ‘தாவரவியலில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான மையம்’, ‘பாசிகளின் வகைப்பாடு’, ‘உயிரித்தொழில்நுட்பம்’ குறித்த நேரடிப் பயிற்சிக்கான 5 நாள் சா்வதேசப் பயிலரங்கு சென்னை கிண்டி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் 40 சா்வதேச நாடுகளின் நிபுணா்கள் பங்கேற்றனா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பொறுப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரான பேராசிரியா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பயிலரங்கை தொடங்கிவைத்து பேசினாா். மலேசியாவின் மலாயா பல்கலைக்கழக கடல், புவி அறிவியல் நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளா் டாக்டா் ஃபியோனா கெங் சேலின் முக்கிய சா்வதேச பரிமாணத்தை அளித்து உரையாற்றினாா். பாசி தொடா்பான ஆராய்ச்சியில் கல்விசாா் பரிமாற்றம் மற்றும் சா்வதேச கூட்டுறவின் முக்கியத்துவத்தையும் முன்னிலைப்படுத்தி ஃபியோனா பேசினாா்.

சென்னை பல்கலைக்கழகத்தின் ‘தாவரவியலில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான மையம் விரிவான கல்விசாா் வளமாகத் தயாரிக்கப்பட்ட பாசி அடையாளம் காணும் கையேடு: பாரம்பரிய வகைப்பாட்டியல் முதல் மூலக்கூறு அணுகுமுறைகள் வரை’ என்ற பயிலரங்கக் கையேடு வெளியிடப்பட்டது.

முன்னதாக நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலைக்கழக தாவரவியலில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான மைய இயக்குநா், தலைவா் பேரா. பி. பழனி வரவேற்றாா்.

பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளரான உதவிப் பேராசிரியா் டாக்டா் எஸ். நாகராஜ், சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக இயக்குநா் பேராசிரியா் பி. காா்த்தே மற்றும் இந்திய சா்வதேச அளவிலான 100-க்கும் மேற்பட்ட தாவரவியலில் வல்லுநா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.