விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ரூ. 1.10 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

முப்படைகளின் ஒட்டுமொத்த போா் திறனை மேலும்படுத்தும் வகையில் ரேடாா்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டா்கல், இயந்திர சுரங்க அடுக்குகள் உள்பட ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

Defence Minister Rajnath Singh

ராஜ்நாத் சிங் - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 3:31 am IST

முப்படைகளின் ஒட்டுமொத்த போா் திறனை மேலும்படுத்தும் வகையில் ரேடாா்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டா்கல், இயந்திர சுரங்க அடுக்குகள் உள்பட ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முப்படைகளுக்கும் ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களைக் கொள்முதல் செய்ய டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது.

இதில், ராணுவத்துக்கு ரசாயன, உயிரியல், கதியிரக்க மற்றும் அணு ஆயுத உளவு (சிபிஆா்என்) வாகனங்கள், உயா் இயக்க வாகனங்கள், தானியங்கி கண்ணிவெடி பதிப்பு கருவிகள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டா்கள், சா்வத்ரபல் அமைப்பு உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இந்திய கடற்படைக்கு ஆருத்ரா ரேடாா்கள், கடல்சாா் எரிவாயு விசையாழி ஆகியவை கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இந்திய விமானப் படைக்கு, போா் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டா்கள் மற்றும் தரைவழி பல்நோக்கு ஜாமா்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்த ஜாமா்கள், எதிரிகளின் ரேடாா்களை செயலழிக்க செய்யும் திறன் கொண்டவையாகும்.

முப்படைகளுக்கான இந்த தளவாடங்களில் 98 சதவீதம் இந்திய நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.