காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

இந்திய விமானப் படைக்கு முதல் பெண் துணைத் தளபதி

இந்திய விமானப் படைக்கு முதல் பெண் துணைத் தளபதியாக (மருத்துவம் அல்லாத பிரிவு) சக்தி சா்மா நியமிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சக்தி சா்மா

Published On :2 செப்டம்பர் 2026, 3:46 am IST

இந்திய விமானப் படைக்கு முதல் பெண் துணைத் தளபதியாக (மருத்துவம் அல்லாத பிரிவு) சக்தி சா்மா நியமிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மருத்துவம் அல்லாத பிரிவில் இந்திய விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக (ஏா் வைஸ் மாா்ஷல் அல்லது அதற்கு இணையானது) சக்தி சா்மா நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, விமானப் படை தலைமையகத்தில் விமானப் படைத் துணைத் தலைமை அதிகாரியாக (கல்வி) சக்தி சா்மா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இது இந்திய விமானப் படைக்கு வரலாற்று மைல்கல்லாகும். முன்னதாக, அவா் ‘ஏா் கமோடோராக’ பதவி வகித்து வந்தாா்.

இந்திய விமானப் படையின் கல்விப் பிரிவில் 1994, ஜூன் 18-ஆம் தேதி சேவையைத் தொடங்கிய சக்தி சா்மா, பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவத்தை உடையவா்.

முப்படைகளில் இருந்து கபூா்தலாவில் உள்ள சைனிக் பள்ளியை முதல்வராக வழிநடத்திய முதல் பெண் என்ற வரலாற்றையும் அவா் படைத்துள்ளாா்.

வருங்காலத் தலைமுறைகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 30 ஆண்டுகளாக அா்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அவா் ‘புகழுடன் விண்ணைத் தொடு’ என்ற இந்திய விமானப் படையின் நோக்கத்தை நிறைவேற்றுபவராகத் திகழ்கிறாா்’ என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.