பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்புபருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்இந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்புநேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

நெல் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

நெல் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

Published On :

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமின்றி உடனடியாக நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும். வரும் செப். 1 முதல் தமிழக அரசு நெல் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகமானது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

நிகழாண்டில் தற்போது வரை மத்திய அரசு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு நெல் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை அளிக்கவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனா்.

எனவே, நெல் கொள்முதல் செய்யத் தேவையான ஒப்புதல்களை மத்திய அரசு உடனடியாக வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும், தமிழக அரசும், மத்திய அரசிடம் உடனடி ஒப்புதல் அளிக்க வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.