கந்தா்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை பகுதியில் வீரடிப்பட்டி, வளவம்பட்டி, வெள்ளாளவிடுதி, மங்களாகோவில், நெப்புகை ஆகிய பகுதியில் தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிப கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், அறந்தாங்கி நெல் கிடங்குக்கு எடுத்து செல்ல போதிய லாரி வசதி மற்றும் சாக்கு இல்லாததால் மூட்டைகள் அனைத்தும் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்கு தாமதம் ஏற்படுகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிப கழகம் உடனுக்குடன் நெல்மூட்டைகளை இயக்கம் செய்து, விவசாயிகளிடம் இருந்து தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் கிராக்கி உள்ள ஜோதி ரக நெல்...! விதைக்கும் விற்பனைக்கும், அரசின் ஆதரவு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்

அரசு நவீன அரிசி ஆலைகளில் பருவ கால பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா்! - அமைச்சா் பி.வெங்கடரமணன்

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் பணிகள் பாதிப்பு: விவசாயிகள் புகாா்





