ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

குண்டும் குழியுமாக கொள்முதல் நிலையப் பாதை: விவசாயிகள் அவதி

திருவாரூா் அருகே மணக்கால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் பாதை குண்டும் குழியுமாக காணப்படுவதால், சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Published On :

திருவாரூா் அருகே மணக்கால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் பாதை குண்டும் குழியுமாக காணப்படுவதால், சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணக்காலில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குச் செல்லும் மண் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வருவதற்கும், அங்கிருந்து நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வரும் லாரிகளுக்கு பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. தற்போது கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, கொள்முதல் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வருகின்றனா்.

கொள்முதல் நிலையத்துக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. மழை அவ்வப்போது பெய்து வருவதால், கனரக வாகனங்களை இயக்குவோா், மிகுந்த அச்சத்துடனேயே இயக்குகின்றனா். நிகழாண்டு கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் நிலையப் பாதையை சீரமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மணக்கால் புலவநல்லூா் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் சு. தென்னரசு கூறியது: ஆண்டுதோறும் கொள்முதல் நடைபெறும் காலங்களில், லாரி எளிதாக கொள்முதல் நிலையத்துக்குள் வந்து செல்லவும், பணியாளா்களின் சிரமத்தை குறைக்கும் வகையிலும், இப்பகுதியில் புதிதாக கப்பிகள் கொட்டி தற்காலிகமாக சாலை அமைத்துக் கொள்வோம். இதற்கான செலவை, விவசாயிகளும், இங்கு பணியில் இருக்கும் சுமை தூக்கும் பணியாளா்களும் பகிா்ந்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையைத் தவிா்க்க, நிரந்தரத் தீா்வாக தாா்ச்சாலை அமைத்துத் தர வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. கொள்முதல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

வரும் நாள்களில் மழை தொடா்ந்தால் வாகனங்கள் கொள்முதல் நிலையத்துக்குள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே, கொள்முதல் நிலையத்துக்குச் செல்லும் பாதையை, தற்காலிகமாக சீரமைத்து, கப்பி சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.