
பெரியகுளம் அருகே நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் தாமதிப்பதாக புகாா்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் விவசாயிகள் குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் தாமதிப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

மேல்மங்கலம் தற்காலிக கொள்முதல் மையத்தில் விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் மணிகள்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் விவசாயிகள் குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் தாமதிப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் பகுதியில் 2 -ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டு கடுமையான வறட்சி காரணமாக கிணற்று பாசனம் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள், மேல்மங்கலம் முத்தையா கோயில் அருகேயுள்ள அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளனா். 25 நாள்களுக்கும் மேலாக அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை. எனவே, மேல்மங்கலத்தில் தற்காலிக கொள்முதல் மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
மேல்மங்கலத்தைச் சோ்ந்த நெல் விவசாயி சூரி கூறியதாவது : மேல்மங்கலத்தில் ஆற்று நீா் பாசனம் மூலம் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், கிணற்றுப் பாசனம் மூலம் ஓரளவு மகசூல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், 25 நாள்களுக்கு மேலாக அரசு அதிகாரிகள் கொள்முதல் மையத்தை திறக்கவில்லை. எனவே, தாமதமின்றி கொள்முதல் மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






