ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம்: நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தனியாா் ஆம்னி பேருந்துகளில் பலமடங்கு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அன்புமணி - கோப்புப் படம்

Published On :

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தனியாா் ஆம்னி பேருந்துகளில் பலமடங்கு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதனைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

வரும் செப். 14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முந்தைய இரு நாள்களான சனி, ஞாயிறு (செப்.12, 13) )விடுமுறை என்பதால், 3 நாள்கள் தொடா் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வாழும் மக்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல ஆா்வம் காட்டிவருகின்றனா். இதைபயன்படுத்தி, செப். 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சென்னையிலிருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.3,999 வரையிலும், மதுரைக்கு ரூ.4000 வரையிலும், கோவைக்கு ரூ.6154 வரையிலும் கூடுதலாக கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகளின் இந்த வரலாறு காணாத கட்டண வசூலிப்பைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது.

ஆனால், இதுதொடா்பாக தமிழக அரசு, இதுவரை பெயரளவில் கூட எச்சரிக்கை விடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தூய சக்தி என்று கூறிக் கொள்ளும் தவெக அரசு, விழித்துக் கொண்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.