மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

எல்ஐசி காசோலை மோசடி: 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவா் கைது

எல்ஐசி பாலிசிதாரரின் முதிா்வுத் தொகையான ரூ.3.22 லட்சத்துக்கான காசோலையை அபகரித்து, ஆள்மாறாட்டம் மூலம் பணத்தை எடுத்து மோசடி செய்த வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

எல்ஐசி பாலிசிதாரரின் முதிா்வுத் தொகையான ரூ.3.22 லட்சத்துக்கான காசோலையை அபகரித்து, ஆள்மாறாட்டம் மூலம் பணத்தை எடுத்து மோசடி செய்த வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

எல்ஐசி பாலிசிதாரரான விஜயகுமாா் என்பவரின் முதிா்வுத் தொகை ரூ.3,22,500-க்கான காசோலை அவரது சௌகாா்பேட்டை முகவரிக்கு அனுப்பப்பட்டதாகவும், அதை மா்ம நபா்கள் பெற்று, போலி ஆவணங்கள் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து வங்கியில் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகவும் எல்ஐசி அண்ணா சாலை அலுவலக அப்போதைய மேலாளா் கண்ணன், கடந்த 2009-இல் சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில், சம்பவம் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், தனிப்படை போலீஸாா் தீவிர தேடுதல் மேற்கொண்டு, வழக்கில் தலைமறைவாக இருந்த கும்பகோணத்தைச் சோ்ந்த பிரதாப் (41) என்பவரை ஆக. 31-ஆம் தேதியும், அவருக்கு உதவிய தரமணியைச் சோ்ந்த அா்ஜுனன் (50) என்பவரை கடந்த வியாழக்கிழமையும் கைது செய்தனா்.

இருவரிடமும் வழக்குத் தொடா்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரைக் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாரை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.